சிங்களப் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சாணக்கியன்!! விளாசித் தள்ளிய அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கும் இடையில் பாராளுமன்றத்தில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சு தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது இந்த உரையாடல் இடம்பெற்றது.
‘சாணக்கியன் எம்.பி மகிந்த ராஜபக்சவிடம் உறுப்புரிமை பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துவிட்டு மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டார்.
அவர் தான் மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார். 2010ல் எங்கள் கட்சியின் டாலி வீதியில் உள்ள தலைமையகத்தில் உறுப்பினராக அட்டை பெற்றுக்கொண்டார்.
இன்று தன்னை புலி என கூறுகின்றார். அவர் கண்டி சில்வெஸ்டர் பாடசாலையில் படித்தார். சிங்களவர் வீடுகளில் இருந்து சாப்பிட்டார். சிங்களப் பெண்களுடன் நட்புகொண்டிருந்தார். சிங்களப் பெண் திருமணம் செய்யப் போகிறாள்.
ஆனால் இன்று தன்னை புலி என கூறுகின்றார். அவர் தேர்தலுக்காக இவ்வாறு கூறுகின்றார். அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வடக்கில் இருந்து எதுவும் கிடைக்காது எனஅமைச்சர் மேலும் கூறியுள்ளார்.