இலங்கையில் கடும் வறட்சி – மலையகத்தில் மீண்டும் தோன்றிய புராதன இடிபாடுகள்
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையுடன் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக குறைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 44 அடியாலும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 49 அடியாலும் குறைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணியின் போது நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரின் கோவில், இந்து ஆலயம் உள்ளிட்ட பல இடிபாடுகள் மீளத் தோன்றியுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





