ஏழு பயணங்கள் – 50 மில்லியன் செலவு : இலங்கை அமைச்சரின் வெளிநாட்டு பயண செலவுகள்!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக செய்தி வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ருவிட்டரில் விளக்கமளித்துள்ள அலிசப்ரி, இந்த தகவல் முற்றிலும் தவறானது என கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த தொகையானது, 5 தேசிய பிரதிநிதிகளின் பயணத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் மற்றும் பிராந்திய மன்றம் ஆகியவற்றுக்காக 5 தேசிய பிரதிநிதிகள் பயணித்ததாகவும், 22 அதிகாரிகள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான இரண்டு இருதரப்பு விஜயங்களும் மேற்படி செலவில் உள்ளடங்கியுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.