மிசிசிப்பியில் பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு
மிசிசிப்பியின் விக்ஸ்பர்க்கிற்கு கிழக்கே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு வயது சிறுவன் மற்றும் அவனது 16 வயது சகோதரி உட்பட 7 பேர் உயிரிழந்ததாக வாரன் கவுண்டி மரண விசாரணை அதிகாரி டக் ஹஸ்கி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தாயால் அடையாளம் காணப்பட்டனர். மற்ற பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரன் கவுண்டியில் போவினாவிற்கு அருகே உள்ள இன்டர்ஸ்டேட் 20 இல் மேற்கு நோக்கி பயணித்த வணிக பயணிகள் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததாக மிசிசிப்பி நெடுஞ்சாலை ரோந்து தெரிவித்துள்ளது.
37 பயணிகள் அடையாளம் தெரியாத காயங்களுடன் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் லத்தீன் அமெரிக்கர்கள் என்று ஹஸ்கி தெரிவித்துள்ளார்.
திணைக்களம் தனது விசாரணையைத் தொடர்கிறது மற்றும் இறந்தவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. வேறு எந்த தகவலும் உடனடியாக வழங்கப்படவில்லை.





