ஈரானில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள் – 36 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!
ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்படி போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை, ஆனால் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு 31 மாகாணங்களில் இடம்பெற்று வரும் குறித்த போராட்டங்களால் இதுவரை 60 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 2,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி 40 சதவீதம் சரிந்துள்ளதை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





