செந்தில் தொண்டமான் – ஜெய் சங்கர் சந்திப்பு!
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், புது டில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்தார்.
இச்சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக பாராட்டுக்களை தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை, இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்ததோடு, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
(Visited 12 times, 1 visits today)





