அரசியல் ஆஸ்திரேலியா

புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்திய செனட்டர் இடைநீக்கம்!

ஆஸ்திரேலிய செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து சர்ச்சையை ஏற்படுத்திய வன் நேஷன் கட்சி தலைவர் செனட்டர் பவுலின் ஹான்சன், செனட் சபை அமர்வில் பங்கேற்பதற்கு 7 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர்.

பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை.

இந்நிலையிலேயே நேற்று செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரின் செயல் அப்பட்டமான இனவெறி செயல் என முஸ்லிம் செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.

குயின்லாந்து மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர் ஹான்சன் அணிந்திருந்த புர்காவை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டபோதிலும், அவர் அதனை செய்யவில்லை.

இதனால் சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செனட்டர் ஹான்சனை இடை நீக்கம் செய்வதற்குரிய பிரேரணையை செனட்டர் பெனி வோங் முன்வைத்தார்.

அத்துடன், கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் முன்மொழியப்பட்டது. இவை நிறைவேற்றப்பட்டன.

எனினும், தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், புர்வாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் செனட்டர் பவுலின் ஹான்சன்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
error: Content is protected !!