இலங்கை – தமிழர் பகுதியில் இளவயதில் நீதிபதியாக இருவர் தெரிவு : குவியும் பாராட்டு
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இள வயதில் நீதிபதியாக பதவியேற்கின்றார்.
வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





