அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துவருகின்றன.

இந்நிலையிலேயே இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது? பொறுப்பு கூற வேண்டிய தரப்பு எது மற்றும் எதிர்காலத்தில் இப்படியான நிலை ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பன பற்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து ஆராய வேண்டும் என எதிரணிகள் யோசனை முன்வைத்துள்ளன.

இந்த கோரிக்கை அடங்கிய ஆவணமே சபாநாயகரிடம், நாடாளுமன்றம் நாளை கூடும்போது கையளிக்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அனர்த்தம் தொடர்பில் நாளை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதமும் இடம்பெறுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!