இந்தியா தமிழ்நாடு

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உச்ச கட்ட பாதுகாப்பு!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு India’s Republic Day சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதையொட்டி, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. 30 ஆம் திகதிவரை பாதுகாப்பு ஏற்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24, 25, 26 ஆகிய 3 நாட்களும் உச்சகட்டபாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட உள்ளது.

அதேவேளை, டெல்லி உட்பட பிரதான நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடந்த சில பயங்கரவாத செயற்பாடுகளால் இம்முறை வரலாறு காணாத பாதுகாப்பு அமுலில் இருக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!