ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்
கடந்த ஆண்டு 6.2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து பிரான்சின் மிக அடையாள சின்னமான மத்திய பாரிஸில் அமைத்துள்ளது உலகப் புகழ் பெற்ற சின்னங்களுள் ஒன்று.தான் ஈபிள் கோபுரம்
இன்று ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தளத்தை நடத்தும் அமைப்பான SETE, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் பொலிசார் அப்பகுதியில் ஒரு மாடியில் அமைந்துள்ள உணவகம் உட்பட, அப்பகுதியில் சோதனையிட்ட்டுள்ளனர்.
மதியம் 1:30க்குப் பிறகு (1130 GMT) பார்வையாளர்கள் ஈபிள் கோபுரம் கீழ் உள்ள மூன்று தளங்கள் மற்றும் சதுக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 1887 இல் தொடங்கி மார்ச் 31, 1889 இல் நிறைவடைந்தது. 1889 ஆம் ஆண்டு உலக கண்காட்சியின் போது இது இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.