வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம்? உக்ரைன் புலனாய்வு பிரிவு
வாக்னரின் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினைக் கொல்ல ரஷ்யா சதித் திட்டம் தீட்டியதாக உக்ரைன் உளவுத் துறையின் தலைவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்லும் பணியை ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பான விஎஸ்பி பணித்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய புலனாய்வுப் பிரிவினர் இதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“பிரிகோஜினைக் கொல்ல விஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்களா என்பதை காலம்தான் சொல்லும்” என்று உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கூறினார்.
அவர்களால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்று சில முக்கியமான கேள்விகள் உள்ளன என்று உக்ரைனின் உளவுத் துறைத் தலைவர் கூறினார்.
ஜனாதிபதி புட்டினிற்கு நெருக்கமான வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு நஞ்சூட்டப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.