ராணுவ ரகசிய ஆவணங்கள் கசிவு: ஆஸ்திரேலிய முன்னாள் ராணுவ வழக்கறிஞருக்குச் சிறை
ஆப்கானிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலியச் சிறப்புப் படையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய ராணுவ ஆவணங்களை ஊடகவியலாளர்களுடன் அந்நாட்டு முன்னாள் ராணுவ வழக்கறிஞரான டேவிட் மெக்பிரைட் பகிர்ந்துகொண்டார்.
இக்குற்றத்திற்காக டேவிட்டிற்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீப்பளித்தது.
திருட்டு, ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டது உட்படத் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் டேவிட் நீதிமன்றத்தில் ஒப்புகொண்டுள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை டேவிட் ஒப்புகொண்டபோதிலும், நாட்டின் நலனுக்காக மட்டுமே தான் இச்செயலைப் புரிந்ததாக அவர் கூறினார்.அவருடைய இந்த வாதத்தை ஆஸ்திரேலிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை.