ரஷ்ய எண்ணெய் மீது இரண்டாம் நிலை வரிகள் – அதிரடி நடவடிக்கையில் ட்ரம்ப்

ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் மீதும் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)