பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு – நேரத்தில் மாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியின் சுழற்சி வேகம் சற்று அதிகரித்துள்ளதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக இருக்கும்.
இதனால் சில நாட்களில் நேரம் நுணுக்கமாக குறைவதைக் கூட உணரக்கூடிய நிலை ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஜூலை 9, ஜூலை 12 மற்றும் ஒகஸ்ட் 5 ஆகிய திகதிகளில், பூமியின் சுழற்சி வேகமானதால், நேரம் 1.3 முதல் 1.5 மில்லி விநாடி வரை குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடருமானால், 2029ஆம் ஆண்டுக்குள் சில விநாடிகள் நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதற்கான காரணமாக, பூமியின் உள் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் மற்றும் வளிமண்டல இயக்கங்களில் ஏற்பட்ட சிக்கலான மாற்றங்கள், சந்திரனின் ஈர்ப்பு விசை, மற்றும் உலக வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இந்த சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டு முதலே தொடங்கியுள்ளதாகவும், இது பூமியின் காலநேரக் கணக்கீடுகளில் மெல்லிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.