பூமியில் 5 பேர் மட்டுமே பார்த்த புதிய நிறத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

மனிதர்களால் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் புதிய நிறத்தை ‘ஓலோ’ என்று பெயரிட்டுள்ளனர்.
5 பேர் மட்டுமே இந்த நிறத்தைப் பார்த்துள்ளனர். இது மயில் நீலம் அல்லது டீல் போன்ற வண்ணத்தை கொண்டது என்று விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.
லேசர் மூலம் மட்டுமே இந்த OLO நிறத்தை உணர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை உணர, ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்களில் லேசர் துடிப்புகளைச் செலுத்தியுள்ளனர்.
இது அவர்களின் பார்வையை அதன் இயல்பான வரம்புகளுக்கு அப்பால் கொண்டு சென்று புதிய நிறத்தை பார்க்க வைத்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)