ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கு பூட்டு!
இங்கிலாந்தின் பல பகுதிகளில் பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள 100 பாடசாலைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இங்கிலாந்து (north-east England), யார்க்ஷயர் (Yorkshire) மற்றும் வடக்கு அயர்லாந்து (Northern Ireland) உள்ளிட்ட பகுதிகளுக்கு பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 15-25 செ.மீ வரை பனிப் பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 4 visits today)




