சிங்கப்பூரில் அதிகரித்துள்ள மோசடிகள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் மின்-வர்த்தக மோசடிச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு முறைப்பாடுகளின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அதிகரித்தது.
2021இல் கிட்டத்தட்ட 2,800 மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக அதிகரித்துள்ளது. உள்துறை அமைச்சு இணைய வர்த்தக நிறுவனங்களின் தரத்தை ஒன்று முதல் 4 வரை என்று வகுத்திருக்கிறது.
ஒன்று என்றால் ஆபத்தானது. இணைய வர்த்தகத் தளம் 4 என்று வகைப்படுத்தப்பட்டால் அது மிகப் பாதுகாப்பானது.
Amazon, Lazada, Qoo10 ஆகியவை ஆகப் பாதுகாப்பான தரநிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த நிலையில் Shopee உள்ளது.
Facebook, Marketplace ஆகியவை ஆகக்குறைவான பாதுகாப்பு தரநிலையைக் கொண்டுள்ளன. முறைப்பாடுகளை வைத்துத் தரம் பிரிக்கப்படுகிறது.