29 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மெட்டா முதலீட்டைப் பெறுகின்ற ஸ்கேல் AI நிறுவனம்

மெட்டா நிறுவனத்தின் புதிய பெரும் தொழில்நுட்ப முதலீட்டை ஸ்கேல் ஏஐ அறிவித்திருக்கிறது.ஜூன் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த முதலீடு, 29 பில்லியன் டாலருக்கு மேல் அந்தப் புதிய நிறுவனத்திற்கு மதிப்பு சேர்த்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஸ்கேல் ஏஐ நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான அலெக்ஸாண்டர் வாங், மெட்டாவில் சேர்ந்து அதன் சொந்த செயற்கை நுண்ணறிவுப் பிரிவுக்கு உதவி செய்யவிருக்கிறார்.
சான் பிரான்சிஸ்கோவில் தளம் கொண்டுள்ள ஸ்கேல் ஏஐ நிறுவனத்தில் 29 பில்லியன் அதிகமான தொகையை மெட்டா முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஓபன்ஏஐ, கூகல், மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றுக்கு எதிராக மெட்டா பலத்த போட்டியில் ஈடுபடும் வேளையில் ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் 28 வயது தலைமை நிர்வாகியைத் தன்வசமாக்கிக் கொண்டது.
ஸ்கேல் ஏஐ நிறுவனத்தில் தனது முதலீட்டையும் உத்திபூர்வ பங்காளித்துவத்தையும் உறுதி செய்திருப்பதாக மெட்டா பேச்சாளர் தெரிவித்தார் . இதில் ஓர் அங்கமாக நாம் நம் பணிகளை ஆழப்படுத்தி, ஏஐ மாதிரிகளுக்குத் தரவுகளை உருவாக்குவோம் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
இந்த நடவடிக்கை குறித்த மேலும் சில விவரங்களைப் பிறகு வெளியிடும் என்று மெட்டா கூறியது.
வர்த்தகங்கள், அரசாங்கங்கள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றுடன் ஸ்கேல் ஏஐ இணைந்து செயற்கை நுண்ணறிவின் பயன்களைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் கூறியது.