அல்ஜீரிய ஜனாதிபதியை சந்தித்த சவுதி உள்துறை அமைச்சர்
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க சவுதி(Saudi) உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் பின் நைஃப்(Abdulaziz bin Saud bin Nayef) மற்றும் அல்ஜீரிய(Algeria) ஜனாதிபதி அப்தெல்மத்ஜித் டெப்பவுனே(Abdelmadjid Tebboune) இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
தலைநகர் அல்ஜியர்ஸில்(Algiers) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அல்ஜீரியாவின் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து மன்னர் சல்மான்(Salman) மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) ஆகியோர் அப்தெல்மத்ஜித் டெப்பவுனேவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜீரியாவிற்கான சவுதி தூதர் அப்துல்லா பின் நாசர் அல்-புசைரி(Abdullah bin Nasser al-Busairi) உட்பட சவுதி அரேபியா மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த பல அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





