ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா!
ரஷ்யாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு ஆசிய நாடுகளுக்கு கடந்த நான்கு மாதங்களில் முதல் முறையாக எண்ணெய் விலையை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி வரும் ஜுன் மாதம், அரபு லைட் கிரேடு எண்ணெய் ஏற்றுமதி விலை மே மாதத்துடன் ஒப்பிடும்போது பீப்பாய்க்கு 25 செண்ட் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைப்பு சந்தையின் எதிர்பார்க்கப்படும் குறைப்பை விட 40 செண்டுகள் குறைவாகும். ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தன. இதன் பிறகு சவுதி அரேபியாவும் கச்சா எண்ணெய் விலையை சுமார் 40 செண்டுகள் குறைக்கும் என்று நம்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.