தமிழ்நாடு பொழுதுபோக்கு

UPDATE; நடிகர் சத்யராஜின் தாயாரின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு

இரண்டாம் இணைப்பு

நடிகர் சத்யராஜின் தாயாரின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யபடவுள்ளது.

அமொரிக்கவில் இருந்து சத்தியராஜின் தங்கை வருவதால் ஞாயிற்றுக்கிழமை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு…

நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும்.இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர்.

சத்யராஜின் 94 வயதானதாயார் நாதாம்பாள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும் கல்பனா மன்றாடியார்,ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் மரணம் அடைந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த மகன் சத்யராஜ் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து கோவை விரைந்துள்ளார்.

அதேபோல சத்யராஜின் தாயார் மரணத்திற்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாளை சத்யராஜின் தாயார் உடல் தகனம் செய்ய இருப்பதால் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கோவை விரைந்துள்ளனர்.

MP

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!