யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடித்து தள்ளிய டிப்பர் வாகனம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர்(52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோப்பை சந்தி சமிக்ஜை விளக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)