உலகம்

சாம்சங் நிறுவனத்தின் திடீர் தீர்மானம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்

சாம்சங் மின்னியல் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விற்பனை, விளம்பரம் ஆகிய பிரிவுகளில் 15 சதவீதமும் நிர்வாகப் பிரிவில் 15 சதவீதமும் இவ்வாண்டு இறுதிக்குள் வேலையை இழக்கக்கூடும்.

சாம்சங் நிறுவனத்தின் இந்தியக் கிளையில் பாதிக்கப்பட்ட சில ஊழியர்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் நிறுவனம் ஆக மோசமான சரிவைக் கண்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் கிளையில் மட்டுமே சுமார் 20 சதவீத ஆட்குறைப்புச் செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் ஊதியம், சிறப்பான வேலையிட நிலைமை ஆகியவற்றுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனால் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு கடும் இடையூறுகளைச் சந்தித்துள்ளது.

அண்மைக் காலமாகவே உயர்தரத் திறன்பேசி விற்பனையில் Apple, சீனாவின் Huawei ஆகிய நிறுவனங்களிடமிருந்து சாம்சங் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!