பல அம்சங்களுடன் அறிமுகமான சாம்சங்கின் Galaxy M05 மொபைல்!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் லைன்அப்பில் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் இந்தியாவில் புதிதாக Galaxy M05 என்ற 4ஜி மொபைலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோனில் MediaTek Helio G85 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மொபைல் பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா திறன்கள் மற்றும் அதிவேகமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை விரும்புவோருக்கான என்ட்ரி லெவல் டிவைஸாக இருக்கும் என சாம்சங் நிறுவனம் கூறி உள்ளது.
இந்தியாவில் Galaxy M05 மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என சிங்கிள் வேரியன்ட்டில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.7,999 ஆகும். இந்த மொபைல் மின்ட் கிரீன் கலர் ஆப்ஷனில் கிடைக்கும். இந்த மொபைல் அமேசான், Samsung.com மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது.
டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட இந்த ஃபோன் octa-core MediaTek Helio G85 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB ரேம் மற்றும் 64GB ஆன்போர்ட் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 6.74-இன்ச் HD+LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இன்பில்ட் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கி கொள்ள முடியும்.
சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம்05 மொபைலானது டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கிறது. இதில் 50MP வைட்-ஆங்கிள் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 aperture கொண்ட 2MP கேமரா அடக்கம். செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இந்த மொபைலின் முன்புறத்தில் 8MP கேமரா உள்ளது. இந்த புத்தம் புதிய மொபைலுக்கு 2 ஆண்டுகளுக்கு OS அப்கிரேட்ஸ் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் அளிக்கப்படும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சாம்சங்கின் Galaxy M05 மொபைலானது 25W ஃபாஸ்ட் சார்ஜருடன் கூடிய 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. யூஸர்கள் கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம், விரைவாக யூஸர்கள் தங்கள் மொபைலை மீண்டும் சார்ஜ் செய்து கொள்ள உதவுகிறது. 4G, ப்ளூடூத், GPS, Wi-Fi 802.11a/b/g/n/ac, Glonass, Beidou, Galileo, USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்டவை இதில் இருக்கும் பிற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்ஃ போன் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலின் மொத்த எடை 195 கிராம் ஆகும்.