குழந்தை பிறக்க முன்பே சூர்யா செய்த அந்த செயல்
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், ஜோதிகா குடும்பத்தை கவனித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய மெமரிஸை சமீரா ரெட்டி பேட்டி ஒன்றில் ஷேர் செய்துள்ளார்.

அதில், ” வாரணம் ஆயிரம் ஷூட்டிங்கிற்காக சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்தோம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்தார். சூர்யா தந்தை ஆகப்போவதற்காக ரொம்பவே ஆர்வத்துடன் இருந்தார்.
அந்த சமயத்தில் பிறக்கப்போகும் குழந்தைக்காக அவ்வளவு ட்ரெஸ்களை சூர்யா எடுத்தார். அது பார்ப்பதற்கே அவ்வளவு க்யூட்டாக இருந்தது. அந்த மெமரிஸ்தான் என் வாழ்க்கையில் சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)





