காதலை உறுதிப்படுத்திய சமந்தா!
நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த பின் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகின்றார்..
ஆனால் கடந்த சில காலமாக சமந்தாவைச் சுற்றி ஒரு சலசலப்பு வந்துகொண்டு இருக்கின்றது.
அதாவது, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இருவரும் டேட்டிங் செய்வதாகவும், காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இருவரும் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சமந்தா ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

‘தி ஆல்கெமிஸ்ட்’ என்ற பிராண்ட் அறிமுக விழாவில் தமன்னா, ராஜ் நிடிமோரு ஆகியோருடன் சமந்தா கலந்துகொண்டார். அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளில், என் கெரியரில் சில தைரியமான முடிவுகளை எடுத்துள்ளேன். புத்திசாலித்தனமான, கடினமாக உழைக்கும் நபர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே” என்று குறிப்பிட்டு, சமந்தா இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.






