இரவில் காதலருடன் சிக்கிய சமந்தா? விரைவில் திருமணம்

நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் மும்பையில் இரவு நேரத்தில் டின்னர் சாப்பிடச் சென்றபோது, அவர்களின் உறவு குறித்த வதந்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்த நடிகை சமந்தா, தொடர்ந்து மும்பையிலேயே வலம் வருகிறார்.
சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் புதன்கிழமை இரவு மும்பையில் ஒரு ஆடம்பர உணவகத்திற்கு டின்னர் டேட்டிங்கிற்காக சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். ராஜ், ஊடகங்களின் வருகையால் எரிச்சலடைந்தவராக காணப்பட்டார்.
பல ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், சமந்தாவோ அல்லது ராஜோ தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் மௌனம் காப்பது மேலும் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது என்கின்றனர்.
சமீபத்தில், ஜூலை 8-ம் தேதி சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராஜ் உடன் டெட்ராய்ட் சென்றிருந்த புகைப்படங்களை பதிவிட்டார். இது அவர்களின் உறவு குறித்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
இதற்கிடையில், ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.அதில் “நீங்கள் விதைத்ததுதான் அறுவடை செய்வீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தற்போதுள்ள சூழ்நிலையை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் யாரையும் குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை என்றனர்.
‘தி ஃபேமிலி மேன் 2’ மற்றும் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ ஆகிய இரண்டு வெப் சீரிஸ்களில் சமந்தாவும் ராஜும் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது நெட்ஃபிக்ஸ் தயாரிக்கும் ‘ரக்த பிரம்மாண்டம்: தி பிளடி கிங்டம்’ என்ற தொடரிலும் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சொத்துக்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை சமந்தாவோ அல்லது ராஜோ தங்கள் உறவு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் பலவிதமான யூகங்களை கிளப்பி வருகின்றனர்.
நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தபோது, எந்தவொரு ஜீவனாம்சமும் வேண்டாம் எனக் கூறிவிட்டார். சமந்தாவை நாக சைதன்யா பிரிந்து விட்டு, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யும் போது, ரசிகர்கள் அவரை படுமோசமாக திட்டினர். ஆனால், சமீப காலமாக நடிகை சமந்தா ஏற்கனவே திருமணமான இயக்குநருடன் சுற்றி வருவதை பார்த்த ரசிகர்கள், தற்போது சமந்தா குறித்த ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர்.