இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : 325 பில்லியன் ரூபாய் தேவை!

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மூலம், அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை சம்பளத்திற்காக செலவிடும் என்று வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீனதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “திவால்நிலையிலிருந்து மீண்ட பிறகு, திவாலான ஒரு நாடு முன்வைக்கும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இதன் மூலம், இந்த அளவிற்கு பொது சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாய், 2026 இல் 128 பில்லியன் ரூபாய், 2027 இல் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படும். அதன்படி, இந்த சம்பளத்தை அதிகரிக்க நாம் 325 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.