நண்பனை கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்… குவியும் வாழ்த்து
நடிகை சாக்ஷி அகர்வால், சைலன்ட் ஆக தன்னுடைய சிறிய வயது நண்பரை காதலித்து கரம் பிடித்துள்ள தகவலை புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில், இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஐடி துறையில் பணியாற்றிய சாக்ஷி அகர்வால், மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்து, இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, நடிகையாக மாறினார். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.
பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்தா.
தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’ படத்திலும் நயன்தாரா தோழிகளில் ஒருவராக நடித்தார்.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது நடிகர் கவினை இவர் காதலித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்த சாக்ஷி அகர்வால், சைலண்டாக தன்னுடைய 33 வயதில்… சிறிய வயது நண்பனான நவநீத் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்த தகவலை தன்னுடைய திருமண புகைப்படங்களுடன் சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.