மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்!
நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார்.
“ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் வரும் பஸ்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் கிராமிய மட்ட ஆதரவாளர்களும் நிச்சயம் வருவார்கள்.
ஏனெனில் கடந்த தேர்தலின்போது தாம் விட்ட தவறை சரிசெய்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
கட்சி பேதமின்றி இப்பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.” எனவும் இந்திக்க அனுருத்த அழைப்பு விடுத்தார்.





