அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (20) அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும்.

இது விடயத்தில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை .

நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையாகவும், சரியான நேரத்திலும் தேவையான கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் நாம் சமர்ப்பிப்போம்.

முடிந்தால் மூன்று நாட்கள் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தை நாளை முதலே நடத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுக்கிறோம்.” – என்றார் சஜித்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!