தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச தெரிவித்தார்.
“பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“தேசிய பேரிடர் நிலையை அறிவிக்க ஏற்பாடு செய்யும் சட்டங்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது,” என்றும் சஜித் விமர்சித்துள்ளார்.




