இலங்கை

நாட்டை அழிக்க நடத்தப்பட்ட சதி குறித்து அம்பலப்படுத்தினார் சாகார!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த எந்தவொரு குழப்பகரமான விடயங்களும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டப்பின் காணாமல்போனது எப்படி என கேள்வி எழுப்பும் வகையில், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகார காரியவசம் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெல்தெனிய தொகுதிக் குழுக் கூட்டம் நேற்று (15.07) நடைபெற்றது. இதில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, தூதரகத்தில் ஒரு பெண் தன்னை கடத்தியதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் முறைப்பாடு அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நான் வேண்டுமென்றே அதை செய்தேன் என்று அந்த பெண் கடந்த வாரம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனால் போராடி கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் புதிய ஜனாதிபதி கொண்டுவரப்பட்டார். ஆனால் அந்த ஜனாதிபதியின் தெரிவுக்குப் பின்னர் நாட்டுக்கு ஒரு டொலர் கூட வராமல் பெற்றோல் வரிசைகள் தீர்ந்தது.

14 மணித்தியால மின்வெட்டு 02 மணித்தியாலமாக குறைக்கப்பட்டது, ஒரு கேஸ் டேங்க் கூட வெடிக்கவில்லை. இவை எப்படி நடந்தன? இந்த சதி நாம் நினைப்பது போல் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான சதி அல்ல. இந்த சதி இந்த ஒட்டுமொத்த தேசத்தையும் அழிக்கும் சதி” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!