செய்தி விளையாட்டு

IPL ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன சச்சின் டெண்டுல்கர் மகன்!

ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே முழு அணி விவரம்!

13 வயது சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்த நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஏலத்தின் 2-வது நாளில் வாங்கப்பட்டவர்களில் அதிகவிலையில் முதலிடத்தை பிடித்தார்.

ஆகாஷ் தீப் (லக்னௌ, ரூ.8 கோடி), தீபக் சாஹர் (மும்பை, ரூ.9.25 கோடி), முகேஷ் குமார் (தில்லி, ரூ.8 கோடி), துஷார் தேஷ்பாண்டே (ராஜஸ்தான், ரூ.6.50 கோடி) அனைவரும் அதிகவிலைக்குச் சென்றனர்.

கிட்டத்தட்ட ஏலம் முடியும் தருவாயில் சர்வதேச அணிக்கு விளையாடாத வீரர்கள், முந்தைய நாளில் விற்பனையாகாத வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சச்சினின் மகன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அவருக்கு அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எந்த அணியில் அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

2021 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹரியானாவுக்கு எதிராக மும்பைக்காக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். 17 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/25. மேலும், அவர் முதல் தரப் போட்டியில் அதிகபட்சமாக 120 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட நெடிய வரலாறு கொண்டுள்ள கிரிக்கெட் கடவுள் என்ற வர்ணிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாதது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!