இலங்கை பாடகர் சபேசனுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த தேவா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் சரிகமப நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழகம், வெளிநாடு, இலங்கை போன்ற இடங்களில் இருந்து நிறைய பாடகர்கள் பங்குபெற்று கலக்கி வருகிறார்கள்.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன், எஸ்பிபி சரண் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் இசையமைப்பாளர் தேவா அவர்களின் ஸ்பெஷல் ரவுண்ட், அவரது ஹிட் பாடல்களை போட்டியாளர்கள் பாடி வருகிறார்கள். அப்படி இலங்கை பாடகர் சபேசன் ஆசை படத்தில் இடம்பெற்ற கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலை அசத்தியுள்ளார்.
பின் அவர் பேசுகையில், 2015 நீங்கள் இலங்கை வந்திருந்தீர்கள், உங்களது நிகழ்ச்சியில் பாட வந்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இப்போது 10 வருடம் கழித்து உங்கள் முன் பாடுகிறேன் என சந்தோஷப்பட்டார்.
அதைக்கேட்டதும் தேவா அவர்கள் டிசம்பர் 5ம் தேதி இலங்கையில் எனது இசைக் கச்சேரி அதில் நீங்கள் பாடப்போகிறீர்கள் என கூறி சபேசன் வாழ்நாளில் மறக்கவே முடியாத இன்ப செய்தியை கூறியுள்ளார்.