ரஷ்யாவின் குட்டி ஹீரோ!! 100 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது திரையரங்கில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய 15 வயது பாடசாலை மாணவன் குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாம் கலிலோவ் என்ற இந்த மாணவர், தாக்குதல் நடந்த தியேட்டரில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு நடுவே பீதியில் ஓடிய மக்களை மண்டபத்தில் இருந்து வெளியே வர வழியனுப்பி வைத்த இந்த மாணவன் பாராட்டு பெற்றுள்ளார்.
இதேவேளை, மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் அமெரிக்க உளவுத் துறை கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவிற்கு தகவல்களை வழங்கியதாக வெளியான தகவலை அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் மறுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த தாக்குதல் சிறிது காலமாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைன் நோக்கி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 133 பேர் உயிரிழந்தனர்.
150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யாவில் பதிவாகிய மிக மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.