ரஷ்ய – உக்ரைன் போர் : விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படும் வீரர்களில் உடல்கள்!
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் 50 சவப்பெட்டிகளை விளாடிமிர் புடினின் “மரண விமானம்” எடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Il-76 விமானம், உலகின் மிகவும் குளிரான நகரமான சைபீரியாவில் உள்ள யாகுட்ஸ்க்கு உடல்களை எடுத்துச் செல்கிறது.
சாட்சிகளின் கூற்றுப்படி, போர் களத்திற்கு போராட டஜன் கணக்கான புதிய வீரர்களை எடுத்துச் செல்லவும் இது பயன்படுத்தப்படுகிறது.
வெளியான காட்சிகளில் இது நகரின் விமான நிலையத்தில் ஆழ்ந்த இரவின் நடுப்பகுதியில் நடைபெறுகிறது. எனவே மைனஸ் 30C இல் பனி மூடிய தார் சாலையில் மூன்று லாரிகளில் மர சவப்பெட்டிகளை அடுக்குவதை காணமுடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 200 லாரிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





