மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் : இருவர் மாயம், 14 பேர் மீட்பு!
ரஷ்ய சரக்குக் கப்பல் ஒன்று ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான மத்தியதரைக் கடலில் இன்று (24.12) மூழ்கியதாக கூறப்படுகிறது.
இயந்திர அறையில் ஏற்பட்ட கோளாறை தொடர்ந்து மூழ்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 02 பணியாளர்கள் மாயமாகியுள்ளதுடன், எஞ்சிய 14 பேர் மீட்கப்பட்டு ஸ்பெயினிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
LSEG என்ற கப்பல் ரஷ்ய துறைமுகமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து டிசம்பர் 11 அன்று புறப்பட்டு, அல்ஜீரியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே நேற்று காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து்ளனர்.
(Visited 3 times, 1 visits today)