உக்ரைனுக்காக உளவுபார்த்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் கைது!
உக்ரைனுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் குழுவை, ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விமானப்படைக்கான ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஆவணங்களை பெயர் தெரியாத நபர்கள் உளவு பார்த்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
இதே குழு ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தம் 4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் வெடிபொருட்கள், நான்கு டெட்டனேட்டர்கள், ராணுவ வடிவமைப்பு ஆவணங்கள், ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் $150,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.