சீனாவுக்கு பறக்கவுள்ளார் ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எதிர்வரும் அக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில் பங்கேற்பதாக அவர் செல்லவுள்ளார். இத்தகவலை ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அதிபர் புடின் சீனா விஜயத்தினைத் தொடர்ந்து அவர் துருக்கிக்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 15 times, 1 visits today)