அமெரிக்காவின் பிடியில் ரஷ்ய எண்ணெய் கப்பல் – அதிகரிக்கும் பதற்றம்!
வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடிப்போம் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் கப்பல் ஒன்று அப்பகுதியில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் படைகளால் துரத்தப்பட்டுள்ள மரைனேரா எண்ணெய் டேங்கர் கப்பலை அழைத்துச் செல்வதற்காக ரஷ்யாவின் பெல்லா 1 என்ற கப்பல் அந்த பகுதியில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்த கப்பல் வழக்கமாக வெனிசுலாவில் இருந்து ரஷ்யாவிற்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது குறித்த கப்பலானது ஸ்காட்லாந்துக்கும் ஐஸ்லாந்திற்கும் இடையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தடைகளை மீறியதாக மரைனேரா எண்ணெய் கப்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பலை அமெரிக்க கடற்படையினரும், பிரித்தானிய உளவு விமானம் ஒன்றும் பின்தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





