ரஷ்ய ஹேக்கர்கள் இங்கிலாந்தின் உள்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
ரஷ்ய ஹேக்கர்கள் இங்கிலாந்தின் உள்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்காரணமாக தேசிய சைபர் பாதுகாப்பு மையம், நாட்டில் மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற முக்கியமான அமைப்புகளை இயக்குபவர்களுக்கு அதிகாரப்பூர்வ அச்சுறுத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லிண்டா கேமரூன், ரஷ்யாவை ஒன்றிணைக்கும் குழுக்களில் இருந்து வெளிவரும் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து எங்கள் உள்கட்டமைப்புகளை பாதுகாக்க நாங்கள் இன்னும் போதுமான அளவு செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் தற்போதைய ஆபத்தை புரிந்துக்கொண்டு, தங்களை மற்றும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)