அசாத் ஆட்சியின் பின்னர் முதல் முறையாக சிரியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய தூதர்கள்
சிரியாவின் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை எதிர்க்கட்சி போராளிகள் வீழ்த்திய பின்னர், முதல் முறையாக டமாஸ்கஸ் நகருக்கு ரஷ்ய அதிகாரிகள் குழு விஜயம் செய்துள்ளது.
இந்தக் குழுவில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டனோவ் மற்றும் சிரியாவிற்கான ரஷ்ய ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டியேவ் ஆகியோர் அடங்குவர் என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழு சிரியாவின் நடைமுறைத் தலைவர் அஹ்மத் அல்-ஷாராவையும், வெளியுறவு அமைச்சரையும் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)