ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் ட்ரோன்களை பயன்படுத்தும் ரஷ்யா!
ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் ட்ரோன்களின் புதிய தொகுப்பை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
காமிகேஸ் ட்ரோன்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக உக்ரைனில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, 25 நாட்களில் முதல் முறையாக இலக்கு வைக்கப்பட்ட நகரங்களில் கெய்வ் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு குறித்த வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரோன்கள், ஒவ்வொன்றும் சுமார் $20,000 செலவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. , அவை பெரும்பாலும் பெரிய திரள்களில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)