ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போர் : முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று!!

ரஷ்யாவுடனான நான்கு ஆண்டுகால மோதலில் சுமார் 55,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர கிரெம்ளின் “சரியான முடிவுகளை எடுக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கிடையே  கியேவ் தேவையான தேர்வுகளை எடுக்கும் வரை ரஷ்ய துருப்புக்கள் தங்கள் தாக்குதல்களை தொடரும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

போர் நிறுத்த விவாதத்தில் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையாக டொனெஸ்க் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புகள் வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் உக்ரைன் இதனை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!