உக்ரைனின் கார்கிவ் நகரை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – 01 வயது குழந்தை உள்பட 50 பேர் படுகாயம்!

உக்ரைனின் கார்கிவ் நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 1 வயது குழந்தை உட்பட 50 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை “பாரிய தாக்குதல்” என்று அழைத்த கார்கிவ் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் டெலிகிராமில் ட்ரோன்கள் நகரின் நான்கு பகுதிகளைத் தாக்கியதாகவும், தீ விபத்துகளை ஏற்படுத்தியதாகவும், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கார்களை சேதப்படுத்தியதாகவும் எழுதினார்.
அந்த நான்கு மாவட்டங்களில் 12 வெவ்வேறு இடங்கள் தாக்கப்பட்டதாகவும், எட்டு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சில மணிநேரங்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றுமொரு தாக்குதலையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறை சபோரிஜியாவில், 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)