ஐரோப்பா

கார்கிவ் பகுதியில் உள்ள கிராமத்தை குறிவைத்த ரஷ்யா : 49 பேர் பலி!

வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்ய படையினர் இன்று (05.10) நடத்திய தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலே சினேஹுபோவ் கூறுகையில்,  கார்கிவின் குப்யான்ஸ்க் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் சுமார் 13:15 (10:15 GMT) மணி அளவில் ஒரு ஓட்டல் மற்றும் ஒரு கடை தாக்கப்பட்டதாகவும், அப்போது ஏராளமான பொதுமக்கள் அங்கு இருந்ததாகவும் கூறினார்.

இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தத்தளிக்கும் காட்சிகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.  குறித்த  கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதா அல்லது ஏவுகணையை வீசியதா  என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்