ஐரோப்பா

உக்ரேன் குழந்தைகளை வடகொரியாவிற்கு அனுப்பிய ரஷ்யா!

ரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகள்  வடகொரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை  பிரச்சாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

கியேவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான பிராந்திய மையம், உக்ரேனிய குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உள்ள ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்ட பல  வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட குழந்தைகள், வடகொரியாவில் இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் போதனைகளை” எதிர்கொண்டதாகவும், இது குழந்தைகள் இடையே கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டொனெட்ஸ்க் (Donetsk) பகுதியைச் சேர்ந்த 12 வயதான  மிஷாவும் (Misha) சிம்ஃபெரோபோலைச் சேர்ந்த 16 வயதான  லிசாவும் வட கொரியாவில் உள்ள சாங்டோவன் முகாமுக்கு (Songdowon) அனுப்பட்டதாக ரஷெவ்ஸ்கா (Rashevska) செனட் துணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

அங்குள்ள குழந்தைகளுக்கு ‘ஜப்பானிய இராணுவவாதிகளை அழிக்க’ கற்றுக்கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!