உக்ரைனில் ட்ரோன் மழை பொழிந்த ரஷ்யா – அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாக்குதல்!
உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கீவ் மற்றும் கார்கிவ் ஆகியவை மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற சிலமணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் ரஷ்யா டொன்பாஸ் பகுதியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. டொன்பாஸ் பகுதியை விட்டுக்கொடுத்தால் மட்டுமே சமரசம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




